சித்த வைத்திய அகராதி 11201 – 11250 மூலிகைச் சரக்குகள்
மலைப்பிரமி – பெரும்பிரமிச்செடி
மலைப்பிராசிதமரம் – பிராமரம்
மலைப்புகையிலை – காட்டுப்புகையிலை
மலைப்பூசித மரம் – மலையாத்திமரம்
மலைப்பூவரசு மரம் – காட்டுப்பூவரசுமரம்
மலைப்பூவிகக் கொட்டை -சேங்கொட்டை
மலைமஞ்சரளிமரம் – மலையரளி மரம்
மலைமதம் – கல்மதம்
மலைமந்தாரை – காட்டுமந்தாரை
மரைமந்திகாப்பூ – சாமந்திப்பூ
மலைமல்லிகை – காட்டுமல்லிகைக் கொடி
மலைமாதுகம் – கந்தகம்
மலைமாமரம் – புளிப்புமாமரம்
மலைமாமிகவிரை – அழிஞ்சில் விரை
மலைமுசுட்டைக் கொடி – முசுட்டைக்கொடி
மலைமுரிகச்செடி – கல்லூரிச்செடி
மலைமுருங்கை – கசப்புமுருங்கைமரம்
மலைமுல்லை – தௌதிகமுல்லை
மலைமுன்னைமரம் – பெருமுன்னை மரம்
மலைமூங்கில்மரம் – பெருமூங்கில் மரம்
மலையகத்திமரம் – கசப்பகத்திமரம்
மலையத்தி – கல்லத்திமரம்
மலையந்தி மல்லிகைச் செடி – அந்திமந்தாரைச் செடி
மயலயம் – சந்தனம், களபம்
மலையரசிமரம் – சந்தனமரம்
மலையரளிமரம் – மஞ்சளலரிமரம்
மலையாசலமரம் – மலைவாழைமரம்
மலையாத்திமரம் – ஆத்திமரம்
மலையாமணக்கு மரம் – வரையாமணக்குமரம்
மலையாரம் – சந்தனம்
மலையாவிகச்செடி – மிளகுச்செடி
மலையானிகம் – மலைக்காளான்
மலையின்முனிவன்மரம் – அகத்திமரம்
மலையீருள்ளி – பெருவெங்காயம்
மலையுருக்கன்கொடி – காட்டுவெற்றிலைக் கொடி
மலையெருக்கிலை மரம் – வரையெருக்கிலை மரம்
மலையேந்திவேர் – மலைதாங்கிவேர்
மலையேலம் – பேரேலம்
மலைவள்ளிக்கொடி – பழிக்கிழங்குக் கொடி
மலைவாசிமரம் – வசுவாசிமரம்
மலைவாழைமரம் – கானல்வாழை
மலைவீரியம் – அன்னபேதி
மலைவெட்புசம் – சந்தனக்களபம்
மலைவெற்றிலை – காட்டுவெற்றிலை
மலைவேசிகச்செடி – மலைப்பச்சைச்செடி
மலைவேம்பு மரம் – மதகிரி வேம்பு மரம்
மலோசிகப்பிசின் – இலவம்பிசின்
மல்லகவரிசி – சிறுவாலுளுவையரிசி
மல்லசம் – மிளகு
மல்லி – கொத்தமல்லி, உருளரிசி




