HomeUncategorizedThirukural 1132 of 1330 - திருக்குறள் 1132 of 1330

Thirukural 1132 of 1330 – திருக்குறள் 1132 of 1330

Thirukural
1132 of 1330 –
திருக்குறள் 1132 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : நாணுத்துறவுரைத்தல்.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
Translation:
My body and my soul, that can no more
endure,
Will lay reserve aside, and mount the
‘horse of palm’.

Explanation:
Having got rid of shame, the suffering body
and soul save themselves on the palmyra horse.
கலைஞர் உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

[ads-post]
மு. உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
மணக்குடவர் உரை:
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிமேலழகர் உரை:
(‘நாணுடைய நுமக்கு அது முடியாது‘, என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்துஅதனை விலக்குவதாய நாணினை அகற்றி. (‘வருந்தினார்க்குஎன மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல்ஆகுபெயர். ‘நீக்கி நிறுத்துஎன்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், ‘உடம்பும் உயிரும்என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. ‘மடலேறும்என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments