HomeUncategorizedThirukural 1133 of 1330 - திருக்குறள் 1133 of 1330

Thirukural 1133 of 1330 – திருக்குறள் 1133 of 1330

Thirukural
1133 of 1330 –
திருக்குறள் 1133 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : நாணுத்துறவுரைத்தல்.
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
Translation:
I once retained reserve and seemly
manliness;
To-day I nought possess but lovers’ ‘horse
of palm’.
Explanation:
Modesty and manliness were once my own;
now, my own is the palmyra horse that is ridden by the lustful.
கலைஞர் உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

[ads-post]
மு. உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
மணக்குடவர் உரை:
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிமேலழகர் உரை:
(‘நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாதுஎன்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன்நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். ‘அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்‘, என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments