HomeUncategorizedThirukural 456 of 1330 - திருக்குறள் 456 of 1330

Thirukural 456 of 1330 – திருக்குறள் 456 of 1330

Thirukural
456 of 1330 –
திருக்குறள் 456 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : சிற்றினஞ்சேராமை.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
Translation:
From true pure-minded men a virtuous race
proceeds;
To men of pure companionship belong no evil
deeds.
Explanation:
To the pure-minded there will be a good
posterity. By those whose associates are pure, no deeds will be done that are
not good.
கலைஞர் உரை:
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

[ads-post]
மு. உரை:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
மணக்குடவர் உரை:
மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லைஇனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின்எச்சம் நன்று ஆகும்‘. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின்எல்லா வினையும் நல்லவாம்என்றும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments