HomeUncategorizedThirukural 457 of 1330 - திருக்குறள் 457 of 1330

Thirukural 457 of 1330 – திருக்குறள் 457 of 1330

Thirukural
457 of 1330 –
திருக்குறள் 457 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : சிற்றினஞ்சேராமை.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
Translation:
Goodness of mind to lives of men increaseth
gain;
And good companionship doth all of praise
obtain.
Explanation:
Goodness of mind will give wealth, and good
society will bring with it all praise, to men.
கலைஞர் உரை:
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

[ads-post]
மு. உரை:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
மணக்குடவர் உரை:
மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
பரிமேலழகர் உரை:
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) – நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும்இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். (‘மன், உயிர்என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. ‘தரும்என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனைஆக்கம் தரும்என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், ‘இனநலம் எல்லாப் புகழும் தரும்என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, ‘அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments