குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நெஞ்சொடுகிளத்தல்.
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
Translation:
My heart, canst thou not thinking of some
med’cine tell,
med’cine tell,
Not any one, to drive away this grief
incurable?.
incurable?.
Explanation:
O my soul, will you not think and tell me
some medicine be it what it may, that can cure this incurable malady?.
some medicine be it what it may, that can cure this incurable malady?.
கலைஞர் உரை:
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.
[ads-post]
மு.வ உரை:
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.
பரிமேலழகர் உரை:
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே – நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று – இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் – யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் – ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், ‘எனைத்தொன்றும்‘ என்றாள்.).




