HomeUncategorizedThirukural 1242 of 1330 - திருக்குறள் 1242 of 1330

Thirukural 1242 of 1330 – திருக்குறள் 1242 of 1330

Thirukural
1242 of 1330 –
திருக்குறள் 1242 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நெஞ்சொடுகிளத்தல்.
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Translation:
Since he loves not, thy smart
Is folly, fare thee well my heart!.
Explanation:
May you live, O my soul! While he is
without love, for you to suffer is (simple) folly.
கலைஞர் உரை:
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

[ads-post]
மு. உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
மணக்குடவர் உரை:
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழிஎன் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவதுஅவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமைநின் பேதைமையே, பிறிதில்லை. (‘நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றதுஎன்னும் கருத்தால்பேதைமைஎன்றாள். ‘வாழிஇகழ்ச்சிக் குறிப்பு, ‘யாம் அவர்பால் சேறலே அறிவாவதுஎன்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments