HomeUncategorizedThirukural 488 of 1330 - திருக்குறள் 488 of 1330

Thirukural 488 of 1330 – திருக்குறள் 488 of 1330

Thirukural
488 of 1330 –
திருக்குறள் 488 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : காலமறிதல்.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
Translation:
If foes’ detested form they see, with
patience let them bear;
When fateful hour at last they spy,- the
head lies there.
Explanation:
If one meets his enemy, let him show him
all respect, until the time for his destruction is come; when that is come, his
head will be easily brought low.
கலைஞர் உரை:
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

[ads-post]
மு. உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
மணக்குடவர் உரை:
பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.
பரிமேலழகர் உரை:
செறுநரைக் காணின் சுமக்கதாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம்பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். (‘பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்கஎன்பார், ‘சுமக்கஎன்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், ‘அவர் தலை கீழாம்என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments