HomeUncategorizedThirukural 861 of 1330 - திருக்குறள் 861 of 1330

Thirukural 861 of 1330 – திருக்குறள் 861 of 1330

Thirukural
861 of 1330 –
திருக்குறள் 861 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைமாட்சி.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
Translation:
With stronger than thyself, turn from the
strife away;
With weaker shun not, rather court the
fray.
Explanation:
Avoid offering resistance to the strong;
(but) never fail to cherish enmity towards the weak.
கலைஞர் உரை:
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.

[ads-post]
மு. உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
மணக்குடவர் உரை:
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
பரிமேலழகர் உரை:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புகதம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேகஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. (‘வலியார என்புழித் துணை வலியும் அடங்கலின், ‘மெலியார்என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments