HomeUncategorizedThirukural 860 of 1330 - திருக்குறள் 860 of 1330

Thirukural 860 of 1330 – திருக்குறள் 860 of 1330

Thirukural
860 of 1330 –
திருக்குறள் 860 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : இகல்.
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
Translation:
From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good
bestow.

Explanation:
All calamities are caused by hatred; but by
the delight (of friendship) is caused the great wealth of good virtues.
கலைஞர் உரை:
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

[ads-post]
மு. உரை:
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
மணக்குடவர் உரை:
மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
பரிமேலழகர் உரை:
இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்குமாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதனவறுமை,பழி,பாவம் முதலாயின. நகல்மகிழ்தல். ‘நகல்என்பதூஉம்செருக்குஎன்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. ‘நயம் என்னும் செருக்குஎனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments