HomeUncategorizedThirukural 648 of 1330 - திருக்குறள் 648 of 1330

Thirukural 648 of 1330 – திருக்குறள் 648 of 1330

Thirukural
648 of 1330 –
திருக்குறள் 648 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
Translation:
Swiftly the listening world will gather
round,
When men of mighty speech the weighty theme
propound.
Explanation:
If there be those who can speak on various
subjects in their proper order and in a pleasing manner, the world would
readily accept them.
கலைஞர் உரை:
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

[ads-post]
மு. உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
மணக்குடவர் உரை:
இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின்சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும்உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும். (தொழில்சாதியொருமை. நிரல்படக் கோத்தல்முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல்கேட்டார்க்கு இன்பம் பயத்தல். ‘சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்‘, என்ற வடமொழி பற்றி, ‘பெறின்என்றார். ஈண்டும்கேட்டல்ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments