HomeUncategorizedThirukural 167 of 1330 - திருக்குறள் 167 of 1330

Thirukural 167 of 1330 – திருக்குறள் 167 of 1330

Thirukural
167 of 1330 –
திருக்குறள் 167 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
Translation:
From
envious man good fortune’s goddess turns away,
Grudging
him good, and points him out misfortune’s prey.
Explanation:
Lakshmi
envying (the prosperity) of the envious man will depart and introduce him to
her sister.
கலைஞர் உரை:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

[ads-post]
மு. உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
மணக்குடவர் உரை:
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
அழுக்காறு உடையானைபிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். ‘தவ்வையைக் காட்டிஎன்பதுஅறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே‘ (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். ‘மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானைஎன்று உரைப்பாரும் உளர்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments