HomeUncategorizedThirukural 737 of 1330 - திருக்குறள் 737 of 1330

Thirukural 737 of 1330 – திருக்குறள் 737 of 1330

Thirukural
737 of 1330 –
திருக்குறள் 737 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : நாடு.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
Translation:
Waters from rains and springs, a mountain
near, and waters thence;
These make a land, with fortress’ sure
defence.
Explanation:
The constituents of a kingdom are the two
waters (from above and below), well situated hills and an undestructible fort.
கலைஞர் உரை:
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

[ads-post]
மு. உரை:
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.
மணக்குடவர் உரை:
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால்.  இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
இருபுனலும் – ‘கீழ் நீர்‘, ‘மேல்நீர்எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும்வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும்அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும்அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்புநாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றிவாய்ந்த மலைஎன்றார். அரண்ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments