HomeUncategorizedThirukural 357 of 1330 - திருக்குறள் 357 of 1330

Thirukural 357 of 1330 – திருக்குறள் 357 of 1330

Thirukural
357 of 1330 –
திருக்குறள் 357 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
மெய்யுணர்தல்.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
Translation:
The mind that knows with certitude what is,
and ponders well,
Its thoughts on birth again to other life
need not to dwell.
Explanation:
Let it not be thought that there is another
birth for him whose mind having thoroughly considered (all it has been taught)
has known the True Being.
கலைஞர் உரை:
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

[ads-post]
மு.வ உரை:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.
மணக்குடவர் உரை:
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
பரிமேலழகர் உரை:
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் – அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா – அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. (‘ஒருதலையா ஓர்த்து‘ என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments