குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : புணர்ச்சிவிதும்பல்.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
Translation:
Although his will his only law, he lightly
value me,
value me,
My heart knows no repose unless my lord I
see.
see.
Explanation:
Though my eyes disregard me and do what is
pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
கலைஞர் உரை:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
[ads-post]
மு.வ உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
மணக்குடவர் உரை:
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் – நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல – கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. ‘அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை‘ ? என்பதாம்.).




