குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : புணர்ச்சிவிதும்பல்.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
Translation:
When as palmyra tall, fulness of perfect
love we gain,
love we gain,
Distrust can find no place small as the
millet grain.
millet grain.
Explanation:
If women have a lust that exceeds even the
measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as
much as the millet.
measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as
much as the millet.
கலைஞர் உரை:
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் – மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் – அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். (‘பனைத்துணையும்‘ என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).




