குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அடக்கமுடைமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அடக்கமுடைமை.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
Translation:
In his station, all unswerving, if man self
subdue,
subdue,
Greater he than mountain proudly rising to
the view.
the view.
Explanation:
More lofty than a mountain will be the
greatness of that man who without swerving from his domestic state, controls
himself.
greatness of that man who without swerving from his domestic state, controls
himself.
கலைஞர் உரை:
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
[ads-post]
மு.வ உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
மணக்குடவர் உரை:
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை– வன்னாச்சிரம தன்மம்.
பரிமேலழகர் உரை:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். ‘மலை‘ ஆகுபெயர்.).




