குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புகழ்.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புகழ்.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
Translation:
If you your days will spend devoid of
goodly fame,
goodly fame,
When men despise, why blame them? You’ve
yourself to blame.
yourself to blame.
Explanation:
Why do those who cannot live with praise,
grieve those who despise them, instead of grieving themselves for their own
inability.
grieve those who despise them, instead of grieving themselves for their own
inability.
கலைஞர் உரை:
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.
[ads-post]
மு.வ உரை:
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.
மணக்குடவர் உரை:
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
பரிமேலழகர் உரை:
புகழ்பட வாழாதார்– தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, ‘இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது‘ என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்–தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.).




