HomeUncategorizedThirukural 678 of 1330 - திருக்குறள் 678 of 1330

Thirukural 678 of 1330 – திருக்குறள் 678 of 1330

Thirukural
678 of 1330 –
திருக்குறள் 678 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
Translation:
By one thing done you reach a second work’s
accomplishment;
So furious elephant to snare its fellow
brute is sent.
Explanation:
To make one undertaking the means of
accomplishing another (similar to it) is like making one rutting elephant the
means of capturing another.
கலைஞர் உரை:
ஒரு செயலில் .டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

[ads-post]
மு. உரை:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.
மணக்குடவர் உரை:
ஒரு வினையால் பிறிதொரு வினையைச்
செய்து கொள்வது
, ஒரு
மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும்
. இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால்
அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை
யென்றது
.
பரிமேலழகர் உரை:
வினையான் வினை ஆக்கிக்கோடல்செய்கின்ற
வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க
; நனைகவுள்
யானையால் யானை யாத்தற்று

அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப்
பிணித்ததனோடு ஒக்கும்
. (பிணித்தற்கு
அருமைதோன்ற
நனைகவுள்என்பது பின்னும்
கூறப்பட்டது
. தொடங்கிய
வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க
. செய்யவே. அம் முறையான்
எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments