HomeUncategorizedThirukural 369 of 1330 - திருக்குறள் 369 of 1330

Thirukural 369 of 1330 – திருக்குறள் 369 of 1330

Thirukural
369 of 1330 –
திருக்குறள் 369 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
அவாவறுத்தல்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
Translation:
When dies away desire, that woe of woes
Ev’n here the soul unceasing rapture knows.
Explanation:
Even while in this body, joy will never
depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been
destroyed.
கலைஞர் உரை:
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

[ads-post]
மு. உரை:
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
மணக்குடவர் உரை:
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.
பரிமேலழகர் உரை:
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்
அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம்ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், ‘துன்பத்துள்துன்பம்என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான்ஈண்டும் இன்பம் இடையறாதுஎன்றும் கூறினார். இனிஈண்டும்என்பதற்குப்பெருகும்என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments