HomeUncategorizedThirukural 1249 of 1330 - திருக்குறள் 1249 of 1330

Thirukural 1249 of 1330 – திருக்குறள் 1249 of 1330

Thirukural
1249 of 1330 –
திருக்குறள் 1249 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நெஞ்சொடுகிளத்தல்.
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
Translation:
My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?.
Explanation:
O my soul! to whom would you repair, while
the dear one is within yourself?.
கலைஞர் உரை:
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

[ads-post]
மு. உரை:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) என் நெஞ்சுஎன் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராககாதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறிமுன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? (‘உள்ளம்என்புழிஅம்பகுதிப் பொருள் விகுதி. ‘நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments