HomeUncategorizedThirukural 1250 of 1330 - திருக்குறள் 1250 of 1330

Thirukural 1250 of 1330 – திருக்குறள் 1250 of 1330

Thirukural
1250 of 1330 –
திருக்குறள் 1250 of 1330

thirukural

குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நெஞ்சொடுகிளத்தல்.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
Translation:
If I should keep in mind the man who
utterly renounces me,
My soul must suffer further loss of
dignity.

Explanation:
If I retain in my heart him who has left me
without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
கலைஞர் உரை:
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

[ads-post]
மு. உரை:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
மணக்குடவர் உரை:
மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமாநம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும்முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். (‘குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்‘ (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல்நெஞ்சுஎன்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. ‘அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments