HomeUncategorizedThirukural 970 of 1330 - திருக்குறள் 970 of 1330

Thirukural 970 of 1330 – திருக்குறள் 970 of 1330

Thirukural
970 of 1330 –
திருக்குறள் 970 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : மானம்.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
Translation:
Who, when dishonour comes, refuse to live,
their honoured memory
Will live in worship and applause of all
the world for aye!.

Explanation:
The world will (always) praise and adore
the fame of the honourable who would rather die than suffer indignity.
கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

[ads-post]
மு. உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
மணக்குடவர் உரை:
இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.
பரிமேலழகர் உரை:
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகுஎஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். (‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்திஎய்துவர்,'(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments