HomeUncategorizedThirukural 194 of 1330 - திருக்குறள் 194 of 1330

Thirukural 194 of 1330 – திருக்குறள் 194 of 1330

Thirukural
194 of 1330 –
திருக்குறள் 194 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
Translation:
Unmeaning,
worthless words, said to the multitude,
To
none delight afford, and sever men from good.
Explanation:
The
words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent
with virtue, remove him from goodness.
கலைஞர் உரை:
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

[ads-post]
மு. உரை:
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
மணக்குடவர் உரை:
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.
பரிமேலழகர் உரை:
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்துபயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும்அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்புஇனிமையும், மெய்யும் முதலாய
சொற்குணங்கள், ‘சொல்லுமாயின்என்பதும், ‘அவர் மாட்டுஎன்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments