HomeUncategorizedThirukural 1032 of 1330 - திருக்குறள் 1032 of 1330

Thirukural 1032 of 1330 – திருக்குறள் 1032 of 1330

Thirukural
1032 of 1330 –
திருக்குறள் 1032 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Translation:
The ploughers are the linch-pin of the
world; they bear
Them up who other works perform, too weak
its toils to share.

Explanation:
Agriculturists are (as it were) the
linch-pin of the world for they support all other workers who cannot till the
soil.
கலைஞர் உரை:
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

[ads-post]
மு. உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
மணக்குடவர் உரை:
உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார். இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:
அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்துஅவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். (‘காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டுஎன்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். ‘உலகத்தார்என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின்ஆணிஎன்றார். ‘பொறுத்தலான்என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். ‘அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்துஎன்று பாடம் ஓதி, ‘அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்என்று உரைப்பாரும் உளர்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments