HomeUncategorizedThirukural 1031 of 1330 - திருக்குறள் 1031 of 1330

Thirukural 1031 of 1330 – திருக்குறள் 1031 of 1330

Thirukural
1031 of 1330 –
திருக்குறள் 1031 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Translation:
Howe’er they roam, the world must follow
still the plougher’s team;
Though toilsome, culture of the ground as
noblest toil esteem.
Explanation:
Agriculture, though laborious, is the most
excellent (form of labour); for people, though they go about (in search of
various employments), have at last to resort to the farmer.
கலைஞர் உரை:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

[ads-post]
மு. உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
மணக்குடவர் உரை:
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலைஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர்ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, ‘உழந்தும் உழவே தலைஎன்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments