HomeUncategorizedThirukural 608 of 1330 - திருக்குறள் 608 of 1330

Thirukural 608 of 1330 – திருக்குறள் 608 of 1330

Thirukural
608 of 1330 –
திருக்குறள் 608 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : மடியின்மை.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
Translation:
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they
be.
Explanation:
If idleness take up its abode in a king of
high birth, it will make him a slave of his enemies.
கலைஞர் உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

[ads-post]
மு. உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
மணக்குடவர் உரை:
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
பரிமேலழகர் உரை:
மடி குடிமைக்கண் தங்கின்மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும்அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மைகாரியக் கேடு. குடிமைகுடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், ‘தன் ஒன்னார்க்குஎன்றதனான் அறிக. அடியனாம் தன்மைதாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments