HomeUncategorizedThirukural 609 of 1330 - திருக்குறள் 609 of 1330

Thirukural 609 of 1330 – திருக்குறள் 609 of 1330

Thirukural
609 of 1330 –
திருக்குறள் 609 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : மடியின்மை.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
Translation:
Who changes slothful habits saves
Himself from all that household rule
depraves.
Explanation:
When a man puts away idleness, the reproach
which has come upon himself and his family will disappear.
கலைஞர் உரை:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
மணக்குடவர் உரை:
குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.
பரிமேலழகர் உரை:
ஒருவன் மடி ஆண்மை மாற்றஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும்அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். (மடியாளுந்தன்மைமடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். ‘குடியாண்மைஎன்பது உம்மைத்தொகை. ‘அவற்றின்கண் வந்த குற்றம்என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments