Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1151 - 1155 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1151 – 1155 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1151 – 1155 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1151. ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை
தேவர் மாட்டும் உள மக்களுள் இல்வழி தேர்கலேன்
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன்
காவல் கன்றின் புனிற்று ஆ அன கார் மயில் சாயலே

விளக்கவுரை :

1152. மா நகர் சுடுதல் ஒன்றோ மதனனை அழித்தல் ஒன்றோ
வான் நிகர் இல்லா மைந்தர் கருதியது அதுவும் நிற்க
வேய் நிகர் இல்ல தோளி விஞ்சையால் விடுத்துக் கொள்ளப்
போய் உயிர் வாழ்தல் வேண்டேன் எனப் பொருள் சிந்திக் கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

1153. கச்சு அற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறு போல
உச்சியும் மருங்கும் பற்றிப் பிளந்து உயிர் பருகிக் கோண்மா
அச்சுற அழன்று சீறி ஆட்டினம் புக்கது ஒப்பக்
குச்சென நிரைத்த யானைக் குழாம் இரித்திடுவல் என்றான்

விளக்கவுரை :

1154. மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்துத் திண் தேர்
பொன் இலங்கு இவுளித் தேரால் புடைத்து வெம் குருதி பொங்க
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை
என்னை இக் கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான்

விளக்கவுரை :

1155. தோழனும் தேவிமார் தம் குழாத்து உளான் துளும்பும் முந்நீர்
ஏழ் தரு பருதி தன்மேல் இளம்பிறை கிடந்ததே போல்
தாழ் தகை ஆர மார்பின் சீவகன் குணங்கள் தம்மை
யாழ் எழீஇப் பாடக் கேட்டு ஓர் அரம்பையைச் சேர்ந்து இருந்தான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments