சீவக சிந்தாமணி 1146 – 1150 of 3145 பாடல்கள்
1146. மணி இயல் யவனச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கிக்
கணைபுரை கண்ணி ஏற்ப உடுத்தபின் செம்பொன் செப்பில்
பிணையலும் நறிய சேர்த்திப் பெருவிலை ஆரம் தாங்கித்
துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே
விளக்கவுரை :
1147. பொன் அணி மணிசெய் ஓடை நீரின் வெண் சாந்து பூசித்
தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும்
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்
மன்னுடன் ஏந்தித் தெய்வ மாதரைச் சூழ்ந்த அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1148. ஆரம் மின்னும் பணை வெம் முலை ஆடு அமைத் தோளினாள்
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள் அரோ
பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்ததே
விளக்கவுரை :
1149. மன்னன் செய்த சிறை மா கடலுள் குளித்து ஆழ்வுழித்
தன்னை எய்திச் சிறை மீட்டனள் தன் மனையாள் எனின்
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன்
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே
விளக்கவுரை :
1150. செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் பழி
இல்லை ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரைப் பொன்மலர்
எல்லை ஆகும் பொதுப் பெண் அவள் யான் குல மங்கையே
விளக்கவுரை :




