Homeஎட்டுத் தொகைநற்றிணை 311 - 315 of 400 பாடல்கள்

நற்றிணை 311 – 315 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

நற்றிணை 311 – 315 of 400 பாடல்கள்
311. நெய்தல் – உலோச்சனார்
பெயினே விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே
ஒன்றே தோழி நம் கானலது பழியே
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி
இருங் களிப் பிரசம் ஊத அவர்
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
விளக்கவுரை :
312. பாலை – கழார்க் கீரன் எயிற்றியார்
நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்தருள
மாரி நின்ற மையல் அற்சிரம்
யாம் தன் உழையம் ஆகவும் தானே
எதிர்த்த தித்தி முற்றா முலையள்
கோடைத் திங்களும் பனிப்போள்
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல் எனவே
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை
நெருங்கிச் சொல்லியது
விளக்கவுரை :
313. குறிஞ்சி – தங்கால் பொற்கொல்லன்
வெண்ணாகனார்
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்புற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்கொல் தோழி காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா
கொய்பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய் புனம் அழிவு உரைத்துசெறிப்பு அறிவுறீஇயது
விளக்கவுரை :
314. பாலை – முப்பேர் நாகனார்
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது
விளக்கவுரை :
315. நெய்தல் – அம்மூவனார்
ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென
பார்த் துறைப் புணரி அலைத்தலின் புடை கொண்டு
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி
நல் எருது நடை வளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய்ஆயின் எம் போல்
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்
மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments