Homeஎட்டுத் தொகைநற்றிணை 391 - 395 of 400 பாடல்கள்

நற்றிணை 391 – 395 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

நற்றிணை 391 – 395 of 400 பாடல்கள்
391. பாலை – பாலை பாடிய பெருங்கடுங்கோ
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்
பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது வரைவு உணர்த்தியதூஉம் ஆம்
விளக்கவுரை :
392. நெய்தல் – மதுரை மருதன் இளநாகனார்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நல் மனை அறியின் நன்றுமன்தில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப
நனி பேர் அன்பினர் காதலோரே
இரவுக்குறி முகம்புக்கது வரைவு நீட
ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்
விளக்கவுரை :
393. குறிஞ்சி – கோவூர் கிழார்
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின் அவருடன்
நேர்வர்கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே
வரைவு மலிந்தது
விளக்கவுரை :
394. முல்லை – ஒளவையார்
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தௌ ர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர
சென்றிசின் வாழியோ பனிக் கடு நாளே
இடைச் சுரத்து எழிலி உறைத்தென மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல் நோகோ யானே
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை
இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து
அளித்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
395. நெய்தல் – அம்மூவனார்
யாரை எலுவ யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம்மிடையே நினைப்பின்
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே
நலம் தொலைந்தது எனத் தலைவனைத் தோழி
கூறி வரைவு கடாயது
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments