Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1961 - 1965 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1961 – 1965 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1961 – 1965 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1961. பெண்பா லவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாணும்
திண்பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்
கண்பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன்
மண்பால் இழிந்த மலர் ஐங் கணை மைந்தன் என்றாள்

விளக்கவுரை :

1962. என்றாள் நினைந்தாள் இது போலும் இவ் வேட்கை வண்ணம்
சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கல் ஆவது
அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம்தீ
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

1963. நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல்
குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை
பறையாய் அறையும் பசப்பு என்று பகர்ந்து வாடி
அறை வாய்க் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள்

விளக்கவுரை :

1964. நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள்
அம் செங் கழுநீர் அலர்ந்த மதி வாள் முகத்தே
வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க மாதோ
தஞ்சம் வழங்கித் தலைக் கொண்டது காம வெம் தீ

விளக்கவுரை :

1965. பூ உண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி எய்ய
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்கொல் என்னா
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்
கோ உண்ட வேலான் குழைந்து ஆற்றலன் ஆயினானே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments