சீவக சிந்தாமணி 2491 – 2495 of 3145 பாடல்கள்
2491. குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலைக் குளிர் மணி
வளமை மல்கி எரிய மடமந்தி கை காய்த்துவான்
இளமை ஆடி இருக்கும் வனத்து ஈர்ஞ் சடை மாமுனி
கிளையை நீங்கிக் கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான்
விளக்கவுரை :
2492. ஆய்ந்த கேள்வி அவன் கான் முளையாய் வழித் தோன்றினான்
தோய்ந்த கேள்வித் துறை போய் அலங்காமும் தோற்றினான்
வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான்
வாய்ந்த கோலம் உடையான் பெரு மஞ்சிகர்க்கு ஏறு அனான்
விளக்கவுரை :
[ads-post]
2493. நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ
ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆடப்
பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரியப் பாங்கின்
வித்தகன் பூசி வெள் வேல் வேந்தனுக்கு இறைஞ்சினானே
விளக்கவுரை :
2494. நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா
அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடித் தெளித்து நங்கை
உச்சி வண்டு இமிரும் மாலை ஒளி முடிச் சிதறினனே
விளக்கவுரை :
2495. வாக்கினில் செய்த பொன் வாள் மங்கல விதியின் ஏந்தி
ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வலக் கவுள் உறுத்தி ஆர்ந்த
தேன்கண் இன் அகிலின் ஆவி தேக்கிடும் குழலினாளை
நோக்கலன் நுனித்து நொய்தா இடக் கவுள் உறுத்தினானே
விளக்கவுரை :




