Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2496 - 2500 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2496 – 2500 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2496 – 2500 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2496. ஆய்ந்த பொன் வாளை நீக்கி அவிர் மதிப் பாகக் கல்மேல்
காய்ந்த வாள் கலப்பத் தேய்த்துப் பூ நிறீஇக் காமர் பொன் ஞாண்
தோய்ந்த தன் குறங்கில் வைத்துத் துகிலினில் துடைத்துத் தூய்தா
வாய்ந்த கைப் புரட்டி மாதோ மருள்தகப் பற்றினானே

விளக்கவுரை :

2497. ஏற்றியும் இழித்தும் இடை ஒற்றியும்
போற்றிச் சந்தனம் பூசுகின்றான் எனக்
கூற்று அனான் முகம் கோலம் செய்தான் கடல்
தோற்றும் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே

விளக்கவுரை :

[ads-post]

2498. கோதைப் பாரத்தி னாலும் தன் நாணினும்
ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும்
பாதம் நோக்கிய பால்மதி வாள்முகம்
ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே

விளக்கவுரை :

2499. உருவச் செங் கயல் ஒள் நிறப் புள் வெரீஇ
இரியல் உற்றன போன்று இணைக் கண்மலர்
வெருவி ஓட விசும்பில் குலாவிய
திருவில் போல் புருவங்கள் திருத்தினான்

விளக்கவுரை :

2500. ஆரம் மின்ன அருங் குயம் தான் களைந்து
ஓரும் ஒண் திறல் கத்தரிகைத் தொழில்
நீரின் செய்து அடி ஏத்துபு நீங்கினான்
தாரன் மாலைத் தயங்கு இணர்க் கண்ணியான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments