Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1156 - 1160 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1156 – 1160 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1156 – 1160 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1156. வயிரம் வேய்ந்த மணி நீள் முடி வால் ஒளி வானவன்
செயிரின் தீர்ந்த செழுந் தாமரைக் கண் இடன் ஆடலும்
உயிர் அனானை நினந்தான் உற்றது ஓதியின் நோக்கினான்
மயில் அனார்க்குப் படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான்

விளக்கவுரை :

1157. இடியும் மின்னும் முழக்கும் இவற்றான் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என
நடலை நோக்கிக் கதிர் நாணுவது ஒப்ப மறைந்தபின்
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே

விளக்கவுரை :

[ads-post]

1158. விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர் தம்
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க எனப்
பெண்ணும் ஆணும் இரங்கப் பெருமான் மகன் சாமியை
அண்ணல் ஏந்தி அகம் புலிக் கொண்டு எழுந்து ஏகினான்

விளக்கவுரை :

1159. குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும்
நன்று உண்டாக என நல் நுதல் வாழ்த்தினள் வாழ்த்தலும்
ஒன்று உண்டாயிற்று அவள் உள் அழி நோயுறு காளையை
என்று உண்டாம் கொல் இனிக் கண்படும் நாள் எனும் சிந்தையே

விளக்கவுரை :

1160. சந்த மாலைத் தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள்
வந்த விண்ணோர்களை வாழ்த்தி ஏத்தி இம் மலர் மாலை தூய்
எந்தை மார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல்
சிந்தை செய்யும் சிறகர்க் கிளி தோற்கும் அம் தீஞ் சொலாள்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments