சீவக சிந்தாமணி 1966 – 1970 of 3145 பாடல்கள்
1966. காமக் கடுநோய்க் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இவ்
ஈமத்தினோடும் உடனே சுட ஏகல் ஆற்றான்
தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல் தாதை
பூ மொய்த்து இருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான்
விளக்கவுரை :
1967. நாவி நோய் செய்த நறும் குழலாள் நாள் நீலக்
காவி நோய் செய்த கருங் கயல் கண் பூங்கொடி என்
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன்
மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லையே
விளக்கவுரை :
[ads-post]
1968. தௌ நீர்ப் பனிக் கயத்து மட்டு அவிழ்ந்த தேம் குவளைக்
கண் நீர்மை காட்டிக் கடல் போல் அகன்ற என்
உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினில் கவர்ந்த
பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ
விளக்கவுரை :
1969. கருங் குழலும் செவ் வாயும் கண் மலரும் காதும்
அரும்பு ஒழுகு பூண் முலையும் ஆர் உயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்று உடலா நோக்கும்
பெருந் திருவி யார் மகள் கொல் பேர் யாது ஆம் கொல்லோ
விளக்கவுரை :
1970. வார் உடுத்த வெம் முலைய வண்டார் பூங் கோதையைப்
பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால்
தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர் தாம் வேண்டுபவேல்
நீர் உடுத்த இந் நகரை நீத்திட்டு ஒழியாரோ
விளக்கவுரை :




