சீவக சிந்தாமணி 1971 – 1975 of 3145 பாடல்கள்
1971. பைங் கண் மணி மகர குண்டலமும் பைந் தோடும்
திங்கள் முகத்து இலங்கச் செவ் வாய் எயிறு இலங்கக்
கொங்கு உண் குழல் தாழக் கோட்டு எருத்தம் செய்த நோக்கு
எங்கு எங்கே நோக்கினும் அங்கு அங்கே தோன்றுமே
விளக்கவுரை :
1972. வாள் ஆர் மதி முகத்த வாளோ வடுப் பிளவோ
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள் வேலோ அம்போ கயலோ நெடுங் கண்ணோ
கோள் ஆர்ந்த கூற்றமோ கொல்வான் தொடங்கினவே
விளக்கவுரை :
[ads-post]
1973. என்றாம் கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து
ஒன்றார்க் கடந்தான் புலம்பு உள் கொண்டு இருத்தலோடும்
அன்றே அமைந்த பசும் பொன் அடர் ஆறு கோடி
குன்றாமல் விற்றான் குளிர் சாகர தத்தன் என்பான்
விளக்கவுரை :
1974. திரு மல்க வந்த திருவே எனச் சேர்ந்து நாய்கன்
செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப
வரி மல்கி வண்டு உண்டு அறை மா மலர்க் கண்ணி மைந்தன்
எரி மல்கு செம் பொன் நிலம் மாமனொடு ஏறினானே
விளக்கவுரை :
1975. நம்பன் சிறிதே இடை தந்து இது கேட்க நாளும்
அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள்
கம்பம் இலாதாள் கமலைக்கு விமலை என்பாள்
செம் பொன் வியக்கும் நிறத்தாள் திரு அன்ன நீராள்
விளக்கவுரை :




