HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4921 - 4925 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4921 – 4925 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4921 – 4925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4921. தானான சமாதிநிலை
நின்றுகொண்டு தன்மையுள்ள ஓங்காரந்தன்னைநோக்கி
கோனான குருபதத்தை மேலேயுன்னி
கும்பகத்தை மேல்நோக்கி பதியமர்ந்து
தேனான மனோன்மணியைக் காணவல்லோ
தேசத்தில் வெகுமாண்பர் சிவயோகிதானும்
பானான பராபரத்தை
தியானித்தேதான் பான்மையுடன் நெடுங்காலம் தவம்செய்வாரே
விளக்கவுரை :
4922. செய்தாலும் மனோன்மணியைக்
காண்பதில்லை தேசமதில் நாலுயுகங் கடந்தாலென்ன
வையகங்கள் தான்முழுதும்
அழிந்திட்டாலும் புகழுஞ்சித்தர் புகழான ஜோதிமயங்
காண்பதல்லால்
மெய்யான ரூபமதைக் காண்பதேது
வேதாந்த நூல்களிலுஞ் சொன்னார்தாமே
விளக்கவுரை :

[ads-post]
4923. சொன்னாரே சித்துமுனி
ரிஷியார்தானும் துப்புரவாய் எந்தனுக்கு சொன்னார்கோடி
தென்னான கும்பமுனி
கூறும்நூலில் தோற்றமுடன் உபதேசம் சொன்னார்போலும்
நன்னயமாய் எந்தனுக்கு
வேதங்கூறி நாதாந்த காலாங்கி பெயரைமாறி 
உன்னிதமாய் உபதேசஞ்
செய்துமல்லோ உவமையுடன் விடையெனக்கு தந்திட்டாரே
விளக்கவுரை :
4924. தந்தாரே
ஜோதிமயந்தன்னைக்கண்டு தன்மையுடன் கிரிதனிலே விடையும்பெற்று
அந்தமுடன் பதினாறாம்
வரையிற்காண வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
சொந்தமுள்ள காலாங்கி
நாதர்தம்மை சுந்தரனார் பதாம்புயத்தை மனதிலுன்னி
இந்தவரை விட்டுமல்லோ
மேலேயப்பா எழிலான கிரிபோக வெண்ணினாரே
விளக்கவுரை :
4925. எண்ணினேன் பதினாறாம் வரையைக்காண யெழிலான மேருகிரிதன்னில்யானும்
குண்ணான மலையதுவும்
குகைகள்தாண்டி கொற்றவனே சுனையதுவும் கடந்துமேதான்
தண்னான
கிரிவளத்தைக்காணவென்று தாக்குடனே குளிகையது பூண்டுகொண்டு
கண்ணான காலாங்கிநாதர்தம்மை
கருத்திலே மனதுவந்து நடத்திட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments