சித்த வைத்திய அகராதி 10701 – 10750 மூலிகைச் சரக்குகள்
பொற்புரவிகச்செடி – பொன்னூமத்தைச்செடி
பொற்றலைப்பரணிச் செடி – சிற்றாமல்லிச்செடி
பொற்றாமரைக் கொடி – செந்தாமரைக்கொடி
பொற்றேவதாரிமரம் – மஞ்சட்தேவதாரிமரம்
பொன்தாழை – மஞ்சட்தாழை மரம்
பொன்தூரிகமரம் – மஞ்சணத்தி மரம்
பொன்முசுட்டை – மலைதாங்கிக் கொடி
பொன்மெழுகு – மஞ்சள்மெழுகு
பொன்னந்தி மல்லிகை – மஞ்சளந்திமல்லிகைச் செடி
பொன்னம்பலவிருட்சம் – தில்லைவிருட்சம்
பொன்னலரி – மஞ்சளாளிமரம்
பொன்னலாரிப்பூ – மதனகாமப்பூ
பொன்னாங்கண்ணி – கொடுப்பைச்செடி
பொன்னாங்காலிச்செடி – மஞ்சட்கரிப்பான் செடி
பொன்னாங்கொட்டை – பூவந்திக் கொட்டை
பொன்னாமிக்கொன்னை – மஞ்சட்கொன்னை மரம்
பொன்னாம்பழம் – நெங்க்கொட்டான் பழம்
பொன்னாம்பு – ஆவரஞ்செடி
பொன்னாவரை – பீத்ததாவரை
பொன்னிமிளை – தங்கநிமிளை
பொன்னிறவெற்றிலை – மஞ்சள் வெற்றிலை
பொன்னுருக்குங் காரம் – பொரிகாரம்
பொன்னூமத்தைச்செடி – மருளுமத்தைச்செடி
போகக்களஞ்சி – பாவை, பெண்
போகித்தும்பை – காசித்தும்பைச் செடி
போகிகதூரிதச்செடி – மணத்தக்காளிச்செடி
போகிவல்லியம் – சந்தனம்
போகிவாசமரம் – சந்தனமரம்
போசகிமரம் – அகத்திமரம்
போசரோகணி – கடுகுரோகணி
போசனகஸ்தூரி – நாரத்தம்பிஞ்சு
போசனகுரடாச்செடி – மிளகாய்ச் செடி
போஸ்துக்காய்ச் செடி – கசகசாச்செடி
போடசெமிக்கி – வயிறு
போடோபில்லிச்செடி – சீனத்துச்செடி
போதகாவண்டம் – பேரண்டம், தலையோடு
போதகிக்கொடி – பசளைக்கொடி
போதாகாசிகம் – மட்டிச் சாம்பிராணி
போதகாமரம் – காஞ்சிரைமரம்
போதகிமரம் – வேங்கைமரம்
போதகிராந்திச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
போதயக்கடலை – பட்டாணிக்கடலை
போதனமூலி – பாதாளமூலி
போதிமமரம் – அரசமரம்
போதுளிமரம் – வெண்கடம்பு மரம்
போதைக்கஞ்சா – சடைக்கஞ்சா
போதைக் காஞ்சனமணி – மண்சாடிக்குண்டுமணி
போதைப்பத்திரி – சாதிப்பத்திரி
போதைப்புல் – காவட்டம்புல்
போதையூமத்தைச்செடி – மருளுமத்தைச்செடி




