சித்த வைத்திய அகராதி 4051 – 4100 மூலிகைச் சரக்குகள்
கானலிந்திரன்கொடி – கொடிவேலிக்கொடி
கானல்மாமரம் – காட்டுமாமரம்
கானல்மிரகமரம் – கொக்குமந்தாரைமரம்
கானல்மிளகாய் – ஊசிமிளகாய்
கானல்வாகியம் – சீரகம்
கானல்வாழை – மலைவாழை
கானல்விராலிச்செடி – விராலிச்செடி
கானல்விருக்கமரம் – பாதிரிமரம்
கானற்கன்னிச்செடி – இருப்பவற்செடி
கானற்பலா – மலைப்பலா
கானற்பீலிதச்செடி – தும்பைச்செடி
கானனுசாரிக்கொடி – நன்னாரிக்கொடி
கானனுசேதிமரம் – நவ்வல்மரம
கானாமுருங்கை – புனல்முருங்கை
கானாமொச்சிக்கொடி – காட்டுமொச்சிக்கொடி
கானாம் வாழை – கானல்வாழைமரம்
கானாவேளைச்செடி – தைவேளைச்செடி
கானிலிந்திரச்செடி – கொடுவேலச்செடி
கானீயக்காய் – கக்கரிக்hய்
கான்மரம – ஆலமரம்
கான்மாக்கொடி – பன்றிப்புல்க்கொடி
கிக்கிலப்பூடு – மலைதாங்கிப்பூடு
கிசிணிக்கொடி – காக்கணத்திக்கொடி
கிச்சிகாப்பட்டை – கொஞ்சிப்பட்டை
கிச்சிலிக்கிழங்கு – பூலாங்கிழங்கு
கிச்சிலிப்படிகரமரம் – தும்புலந்தி
கிச்சிலிப்பழம் – ஆரஞ்சிப்பழம்
கிச்சிலிமரம் – நாரத்தைமரம்
கிச்சிலிவாழைமரம் – இரஸ்தாரிவாழைமரம்
கிஷ்ணபாணமரம் – எட்டிமரம்
கிஷ்ணபேடரோகிணி – கடுகுரோகிணி
கிஷ்ணபோளம் – கரியபோளம்
கிஷ்ணவாலிக்கொடி – நன்னாரிக்கொடி
கிஷ்ணவாலிக்கொடி – குதிரைவாலிக்கொடி
கிஸ்மிஸ்பழம் – விரையிலாமூலிப்பழம்
கிஞ்சகபருனிச்செடி – துளசிச்செடி
கிஞ்சகபன்னிச்செடி – நாயுருவிச்செடி
கிஞ்சகாக்கீரை – கொடிக்காசரைக்கீரை
கிஞ்சமரம் – புளிமாமரம்
கிஞ்சற்கீரை – ஆரைக்கீரை
கிஞ்சிகாமரம் – வேப்பமரம்
கிஞ்சிகிவாத்திமரம் – திருவாத்திமரம்
கிஞ்சுகமரம் – முள்முருக்குமரம்
கிஞ்சுகிமரம் – பலாசுமரம்
கிடசாரிச்செடி – கடைச்சிச்செடி
கிடப்பரிணச்செடி – அடுக்குச்செம்பரத்தைச்செடி
கிட்டிக்கிழங்கு – சின்னிக்கிழங்கு
கிட்டிணகாரம் – சவுக்காரம்
கிட்டிணசாரம் – திப்பிலி
கிட்டிணசுரச்செடி – கருநொச்சிச்செடி




