HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4721 - 4725 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4721 – 4725 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4721 – 4725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4721. இட்டதொரு சீனபதிபெண்களாலே
எழிலான உந்தனது ஞானயோகம்
சட்டமுடன் கெட்டழிந்து
தடுமாறாமல் தாக்கான காலாங்கி வலுவினாலே 
மட்டமாம் போலிருந்து
ஞானந்தன்னை பாலித்தாய் தவயோகபூரணத்தை
அட்டதிசைத் தான்புகழும்
போகநாதா அவனிதனில் உனைப்போல சித்துமுண்டோ
விளக்கவுரை :
4722. உண்டான தவநிலையை உறுதிகொண்டு
வுண்மையுடன் மடுதனிலே நின்றுகொண்டு
தண்மையுடன் முதலைவாய்ப்
பிள்ளைதன்னை தகமையுடன் வாங்கினதோர் சாபந்தன்னை
திண்மைபெற மனநிலையை
உறுதிகொண்டு தீர்க்கமுடன் யோகமதை சாதித்தல்லோ
உண்மையுடன் நின்றதொரு
இதிகாசத்தை வுத்தமனே யென்சொல்வேன் என்றார்தாமே
விளக்கவுரை :

[ads-post]
4723. தாமான போகரிஷிமைந்தா கேளும்
தாரணியில் திரேதாயினுகத்திலப்பா
பூமானாஞ் சித்துமுனி
ரிஷிகள்கோடி புகழான நாதாந்த சித்துதாமும்
சாமான மாகவல்லோ வாதந்தேடி
தாரிணியில் சமைத்தார்கள் மலைபோற் தங்கம்
நாமேதான் அறிந்தமட்டும்
சொல்வேனப்பா நாதாந்த சித்தொளிவின் தங்கந்தானே
விளக்கவுரை :
4724. தங்கமாம் நாதாந்த
சித்துதாமும் தாரணியில் வெகுகோடி வாதவித்தை
புங்கசித்து எட்டுடனே வஷ்டயோகம்
புகழான ரேணுகையின் மோகத்தாலே
சங்கமுகந்தான்போலே பூஷணங்கள்
சதுராகத்தான் முடித்தார் மலைபோல்தங்கம்
இங்கிதமாம் லீலைதனில்
மையல்கொண்டு எழிலாகத் தான்சமைத்தார் மேருபொன்னே
விளக்கவுரை :
4725. மேருபோற் பொன்னையல்லோ தானமைத்து மேதினியில் ரேணுகைக்குப் பூஷணங்கள்
சீருடைய வாபரணங்கோடாகோடி
திக்கெங்கும் கண்டதில்லை பூஷணங்கள்
காரிழையாள் ரேணுகைக்கு
வாதத்தங்கம் கட்டழகர் சித்தரெல்லாம் முடிப்பித்தேதான்
பாரினிலே தவநிலையைத்
தான்மறந்து பதாம்புயத்தைப் பாராமல் கேட்டார்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments