HomeUncategorizedஅகத்தியர் பன்னிருகாண்டம் 151 - 155 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 151 – 155 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 151 – 155 of 12000 பாடல்கள்

151. ஆமேதான் பண்டிதற்குக் கல்வம்சொல்வேன்
    அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளும்
    சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
    வலமான …………..யாமது வாழஞ்சொல்வேன்
போமே தான் வங்குலமு மிரண்டதாகும்
    பொலிவான நன்னியென்ற கல்லுமாமே.
    
விளக்கவுரை :

152. கல்லான கல்லதுதான் சொல்லக்கேளும்
    கருக்குருந்தை செங்குருத்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
    திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
    வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும்யோகம்
    பூதலத்தில் தேவவயித்த தியனாம்பாரே.

விளக்கவுரை :

153. பாரேதான் வயித்தியனும் யோகவானாய்
    ………………………………………………………………………….
யோசனைக ளுள்ள ………………………………..
    ……………………………………………………………………………
சீரேதான் ………………க்கவல்லான்
    சிறப்பான சீஷனுக்கு கந்தவல்லான்
கூரே ………………………………….
    குவலயத்தில் கீர்த்தியுள்ளோன் வயித்தியவானே.

விளக்கவுரை :

154. வானான தேவதா வயித்தியனாயும்
    வண்மையுள்ள சாத்திரத்தில் சித்தனாயும்
கோனான குருவணக்கம் பெற்றோனாயும்
    குவலயத்தில் ரிடிகளின்மேல் இரக்கவானாய்
தேனான கற்பமது கொண்டவானாய்
    தேசத்தில் மாய்கைதனை விட்டவானாய்
பானான பராபரத்தை நினைக்கும்வானாய்
    பட்சமுட னிருப்பவனே வயித்தியனாமே.

விளக்கவுரை :

155. ஆமேதான் புவஸ்தியனே இன்னஞ்சொல்வேன்
    அப்பனே பண்டிதவான் திறமைகேளும்
தாமேதா வைரவர்கள் மனதின்பாகம்
    தக்கபடி யறிவதற்கு மதியும்வேண்டும்
நாமேதான் சொன்னபடி யுலகுதன்னில்
    நன்மையுள்ள புண்ணியரும் பாவியுண்டு
வேமேதான் கருவிகளு மெத்தவுண்டு
    வேகமுள்ள யின்னம்வெகு மாந்தருண்டே.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments