HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4621 - 4625 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4621 – 4625 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4621 – 4625 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4621. ஓதியே திருவேலர்
ரிஷியார்தாமும் ஓகோகோ போகரிஷிநாதருக்கு
நீதியுடன் ஞானோபதேசங்கூறி
நிட்களங்கமானதொரு மகிமையெல்லாம்
வாதியாஞ் சித்தர்முனி
சொரூபந்தானும் வளமான வதிசயங்கள் காணாதெல்லாம்
பாதிமதி சடையணிந்த போகருக்கு
பட்சமுடனுபதேசஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :
4622. பாரேதான் காலாங்கி சீஷபாதா
பரிவாக யுந்தனுக்கு சொல்வேனப்பா
நேரேதான் கிக்கிந்தா
மலையினுச்சி நெடியான வடக்குபுறந் தெற்குவாசல்
சீரேதான் வுத்தமென்ற
சுனையொன்றுண்டு சிறப்பான பொன்மயிலுமங்கேயுண்டு
சேரேதா னாவடியார்
சமாதியுண்டு செங்கண்மால் சக்கரமும் அங்கேயுண்டே
விளக்கவுரை :

[ads-post]
4623. உண்டான சக்கரமுங் காவலுண்டு
வுதகமென்ற மலைமேலே சுனையிலப்பா
அண்டர்தொழும் ஆவடியார்
தன்றன்பக்கல் வழகான பொன்மயிலுமங்கேயுண்டு
கண்டுமே மனதுவந்து
களிப்படைந்து கனமுடனே வார்த்தையது மிகவுங்கூறி
மண்டலத்தில் அதிசயங்கள்
யாவுஞ்சொல்லி மார்க்கமுடன் வருகவென்று விடைதந்தாரே
விளக்கவுரை :
4624. விடையான விடையதுவும்
பெற்றுக்கொண்டு வீறான குளிகையது பூண்டுகொண்டு
தடையறவே கிக்கிந்தா
மலையினுச்சி தண்மையுடன் வடக்குபுறம் 
மேற்குவாசல்
சடைபோன்ற போகரிஷிநாதர்தானும்
சட்டமுடன் சிவலிங்கந் தன்னைக்கண்டு
நடையுடனே மேற்பதியில்
செல்லும்போது நலமான பொன்மயிலை கண்டிட்டாரே
விளக்கவுரை :
4625. கண்டாரே பொன்மயிலை போகர்தானும் கனமுடனே எதிர்நின்று முடிகள்சாய்த்து
தெண்டமுடன்
பதாம்புயத்தைத்தான்வணங்கி தேற்றமுடன் கூறலுற்றார் ரிஷியார்தாமும்
பண்டதுபோல் தங்கமென்ற
மயில்தானப்பா பாண்டவனே போகரிஷிதன்னைப்பார்த்து
ஒண்டியுடன் மலைமேலே வந்தபாலா
வுத்தமனே யாரென்று கேட்கலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments