HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4616 - 4620 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4616 – 4620 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4616 – 4620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4616. வணங்கவே சமாதிமுகந்
தனிலிருந்து வளமான சித்துமகாரிஷியார்தாமும்
இணங்கவே எந்தனையும்
மனதுவந்து எழிலான சிறுபாலா யாரென்றென்ன
சுணங்கமது வாராமல்
அடியேன்தானும் துப்புரவாய்க் காலாங்கி சீஷனென்றேன்
மணங்கமழும் சித்துமகா
சொரூபர்தானும் மனக்களிப்பாய் வார்த்தையது கூறுவாரே
விளக்கவுரை :
4617. கூறுவார் வாய்திறந்து எந்தனைத்தான் கூறான வரிச்சந்திரன் எங்கேயென்றார்
மாறுபடு எந்தன்மனம்
பேதலித்து வையகத்தில் அரிச்சந்திரன் கண்டதில்லை 
வீறுபுகழ் சுடலைபதி
தன்னில்யானும் விருப்பமுடன் அரிச்சந்திரன் கல்லைக்கண்டேன்
ஆறுபுகழ் சூழ்நகரமாசுவேந்தன்
அவனிதனில் மாண்டிட்டார் என்றிட்டானே
விளக்கவுரை :

[ads-post]
4618. என்றேனே வரிச்சந்திரன்
தன்னைக்காணேன் எழிலான வரிச்சந்திரன் கூறும்போது
குன்றான மகமேரு ரிஷியார்தாமும்
குவலயத்திலில்லையென்ற மொழியுங்கேட்டு
சென்றுமே மூன்றுயுகங்
கடந்துபோச்சு செயலான கலியுகமும் பிறக்கலாச்சோ
என்றுமே ரிஷியாரும்
மனதுநொந்து எழிலான வார்த்தையது சொல்லிட்டாரே
விளக்கவுரை :
4619. சொல்லவே யடியேனை பாறைகொண்டு
சோறாமல் மூடவென்று விடையுந்தந்தார்
புல்லவே யடியேனும்
சமாதிதன்னை புகழாக முடியவல்லோ சமாதிவர்க்கம்
அல்லவருங் கண்டதினால்
லோகமெல்லாம் அவமான வார்த்தைக்கு உடையுண்டென்று
சொல்லியே எந்தனையும்
மூடச்சொல்லி துப்புரவாய் வாக்கதுவும் தந்திட்டாரே
விளக்கவுரை :
4620. தந்திட்டார் என்றதுமே
வரலாறுந்தான் தகமையுடன் பதிவேலர்க்குரைத்தேன்யானும்
அந்தமுடன் திருவேலர்
ரிஷியார்தானும் வன்புடனே மனங்கனிந்து எந்தன்மீது
சொந்தமுடன் என்மீதிற்
பட்சம்வைத்து சுத்தமுள்ள காலாங்கி கிருபையாலே
விந்தைபுகழ் தேசாதி
மகிமையெல்லாம் விருப்பமுடன் எந்தனுக்கு ஓதினாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments