HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5291 - 5295 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5291 – 5295 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5291 – 5295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5291. பூசியே மண்டலந்தா னிந்தபாகம்
பொங்கமுடன் தான்குடித்து வருகும்போது
மாசிபடா தேகமதில் வந்தரோகம்
வலுவழிந்து நாட்குநாள் குறைந்துமல்லோ  
பாசியது போல்படர்ந்த
சில்மிஷங்கள் பாலகனே மேனிவிட்டு பறக்கும்பாரு
காசினியில் உன்னையப்பா
கடவுளாகக் கருத்தில்வைத்து காலில்வந்து பணிகுவாரே
விளக்கவுரை :
5292. பணிகுவார் கருமிகளும்
உன்னையப்பா பாங்குடனே குடிகெடுக்கும் பாவிமார்கள்
அணியணியாய் உன்பாதந்
தொழுவாரப்பா அப்பனே யுந்தமக்கு தருமமுண்டு
துணிவுடனே நீயுமொரு சித்தனாக
துப்புரவாய் லோகமதி லிருந்துகொண்டு
மணிபோன்ற சின்மயத்தை
மனதிலெண்ணி மகிட்சியுடன் லோகமதில் வாழ்குவீரே
விளக்கவுரை :

[ads-post]
5293. வாழ்கவென்றால் பாவிகளுந்
துரோகஞ் செய்தால் மார்க்கமுடன் மனந்தனிலே
வையாமற்றான்
தாழ்கவே யவர்களுக்கும்
பின்னும்நீதி சட்டமுடன் தான்செய்ய மெத்தநன்று
ஆழ்கவே வையகத்தில்
கீர்த்திகொண்டு அடுத்தஜென்ம பகையாளி யார்வந்தாலும்
வாழ்கவே யவர்களுக்கு சோடசார
வண்மையுடன் செய்குவதும் தருமம்பாரே  
விளக்கவுரை :
5294. பாரேதா னின்னமொரு பாகங்கேளு
பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாயப்பா
நேரேதான் காலாங்கி
நாதர்பாதம் நெறிமுறைமைத் தான்வணங்கி நீதியாக
சேரேதான் சிங்கியது
கொண்டமாண்பர் சிறப்புடனே நோயகலுங்காயமப்பா
தீரேதான் தேகமது வீறுபோக
தீர்க்கமுடன் காயாதி கற்பஞ்சொல்வேன்
கூரேதான் கற்பமதை
செய்துமல்லோ கொற்றவனே நீகொடுக்க தருமமாமே
விளக்கவுரை :
5295. தருமமா மகத்தியரும்
இந்தபாகம் சட்டமுடன் பூரணத்தில் சொல்லவில்லை
கருமமது வழியாமல் மூலிகற்பம்
சாங்கமுடன் சொன்னாரே வேரொன்றில்லை
திருமகளின் கடாட்சத்தால்
காயகற்பம் திட்டமுடன் சொல்லவில்லை பூரணத்தில்
குருவான யெனதையர்
காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு நீதியாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments