HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5276 - 5280 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5276 – 5280 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5276 – 5280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5276. பாரேதான் ஸ்நாணமது
செய்யநன்று பாங்கான சடங்குகளுஞ் செய்யநன்று
நேரேதான் ஓமமது செய்யநன்று
நெடிதான தீட்டதுவைக் கழிக்கநன்று
சீரேதான் சாஸ்திரத்தின்
தொகுப்பைப்போல சிறப்பான வைதீகஞ் செய்யநன்று
தீரேதான் தீட்டினது
மார்க்கத்தாலே திகழுடனே யொன்றுதான் காணார்பாரே
விளக்கவுரை :
5277. காணாரே சூதகங்கள்
நேர்ந்தபோதும் கடிதான வேலைமுகஞ் செய்யும்போதும்
நீணவே மண்பாண்டம்
தனையெடுத்து நீதியுடன் ஜலக் கரைக்குப்போகும்போது
வேணபடி யன்னமது
சமைக்கும்போதும் வேண்டியே விருந்தமுர்தங் கொள்ளும்போதும்
ஆணவங்கள் தானொடுங்கித்
தீட்டேகண்டால் அவனிதனில் விட்டெறிந்து
போனார்தாமே
விளக்கவுரை :

[ads-post]
5278. போட்டாரோ பாண்டமது
வன்னந்தானும் பொங்கமுடன் காய்ப்பதார்த்தங்கள்பேதம்
நீட்டமுடன் சமைத்ததுவும்
போட்டிட்டாரோ நிலையான தீட்டதுவும் மெய்யேயாகும்
தேட்டமுடன் அவர்போட்ட
வேஷமெல்லாம் தெளிவான வேஷமென்று செப்பலாகும்
வாட்டமுடன் தீட்டதனில்
பிறந்தோர்தாமும் வண்மையுடன் தீட்டதுவும் மெய்யென்றாரே
விளக்கவுரை :
5279. மெய்யான தீட்டதுவும்
தயங்கியல்லோ மேதினியில் தேகமென்ற வுருவுமாச்சு
கையுடனே கருவிகரணாதியோடும்
காசினியில் மாதர்களின் கெர்ப்பக்கோளில்
பையுடனே வந்துதித்த
சாற்பாத்திரந்தான் பாலகனே திரண்டுருவாய் வடிவங்கொண்டு
எய்யவே கடவுளது வரத்தினாலே
யெழிலான சடலமது பிறக்கலாச்சே
விளக்கவுரை :
5280. ஆச்சப்பா சதகோடி
மனிதரெல்லாம் அப்பனே பிறவியது யிதனாலாச்சு
மூச்சுடனே தேகாதி
கற்பத்தோடும் மூதுலகைக் கண்டதொரு மானிடமுமாச்சு
பாச்சலென்ற பிறவியது
தீட்டேயாச்சு பாங்கான சடலமது மண்கூறாச்சு
மாச்சலுடன் மகதேவர்
கடாட்சத்தாலே மானிலத்தில் சகலவுயிர் தீட்டாலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments