HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5251 - 5255 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5251 – 5255 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5251 – 5255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5251. உண்மையாம் சீனபதிதேசத்தோர்க்கு
ஓகோகோ சைவங்கள் இல்லையப்பா
கண்மையாய் மாமிஷங்கள்
புலால்தானும் கபடன்றி புசிப்பது நீதியாகும்
வண்மையுடன் ஜெபதபங்கள்
குளியலுண்டு வளமான நேமநிஷ்டை யனேகமுண்டு
திண்மையாம்
மாமிஷப்பிலாதவர்க்கம் திகழுடனே தின்பார்கள் சைவந்தானே
விளக்கவுரை :
5252. சைவவென்பார் பேதாபதங்களில்லை
சாதுரிய பதார்த்தவகை புசித்திட்டாலும்
கைதவங்கள் பிசகாத
சுழிகள்போலும் கைலாயநாதரைப்போல் தவமும்செய்வார்
மைவனங்கள் மெத்தவுண்டு
சீனத்தார்க்கு மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரமென்பார்
வெய்தவம் பூண்டாலும்
சீனத்தார்கள் விருப்பமுடன் சைவமது யில்லைதானே 
விளக்கவுரை :

[ads-post]
5253. தானான புலிப்பாணி மைந்தாகேளு
தகமையுட னின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலே
தேனான தேசமெலாம்
குளிகைகொண்டு தெளிவுடனே எழுகடலுஞ் சுற்றிவந்தேன்
மானான மாண்பரிட சைகைகண்டேன்
மகத்தான சாஸ்திரங்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
5254. உண்டான லோகபதி மாண்பரெல்லாம்
ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு
கண்டல்லோ சாஸ்திரங்கள்
அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல
மிண்டான வார்த்தைகளும்
மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்
அண்டர்முனி முதலானோர்
கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே
விளக்கவுரை :
5255. பேசியே வெகுகோடி
மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ
பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதாமாந் தத்துவங்கள்
தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத
மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments