HomeUncategorizedஅகத்தியர் பன்னிருகாண்டம் 311 - 315 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 311 – 315 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 311 – 315 of 12000 பாடல்கள்

311. பார்க்கவே கருவூரார் பரிசனந்தான்
    பாண்மைபெற எண்பதுவும் பண்பாய்நோக்கு
தீர்க்கமுடன் என்னூலு பதினாறப்பா
    திறமான பரிசனத்தைப் பாருபாரு
ஏர்க்கவே தூம்பிரமாம் யெந்தன்னூலு
    எழிலான அன்பதுவும் பார்க்கநன்று
சேர்க்கவே யெட்சணியா மைம்பதும்பார்
    சிறப்பான ரோமரிடி கூறும்வாறே.

விளக்கவுரை :

312. வாறான பட்சணியும் பார்த்தபின்பு
    வகுப்பான யெட்சணியும் பாருபாரு
கூறான தன்வந்திரி கியாழம்நூறு
    கொற்றவனே பார்த்தாலே சிந்தனாவாய்
தேறான நந்தீசர் பூசாவிதிதானும்
    தேற்றமுடன் பார்ப்பதுவு மெத்தநன்று
வேறான சட்டமுனி கியாழம்நூறூ
    விருப்பமுடன் பார்த்தாக்கால் காயசித்தி
சாரான தட்சணா மூர்த்திநாயன்
    சட்டமுட ணன்பதுதான் பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :

313. தானான புலஸ்தியனே சொல்லக்கேளுஞ்
    சார்பான வுன்மந்திரந் திருமந்திரந்தான்
தேனான அன்பதுவும் பார்த்தபின்பு
    தெளிவாக சோதிமா முனிவர்சொன்ன
பானான போகருட சடாட்சரந்தான்
    பட்சமுடன் எண்பதுவும் பார்க்க வேண்டும்
கோனான எண்பதுவும் பார்க்க வேண்டும்
    கொப்பெனவே காவியமாஞ் சுருக்கம்நூறே.

விளக்கவுரை :

314. நூறான போகருட மறப்புசூத்திரம்
    நுட்பமுடன் முப்பத்தி ரெண்டும்பாரு
வானான போகரது குளிகைமார்க்கம்
    வகுப்பணியாய் முப்பத்தி ரெண்டும்பாரு
தேனான போகரது மூலிகைவேதை
    தெளிவாக வறுபத்து நாலுபாரு
மீறான பெரு நூல் காவியந்தானப்பா
    மிக்கான சுருக்கம் பதினஞ்சும்பாரே.

விளக்கவுரை :

315. அஞ்சான வேதமுனி சொன்னநூலாம்
    அழகான காவியமா யிரந்தானாகும்
துஞ்சாத சுருக்கமப்பா இருபதாகும்
    துறைவான சூத்திரமு நூறதாகும்
கஞ்சமுனி தானுரைத்த பெருநூலப்பா
    காசினியி லாயிரமாங் காவியந்தான்
மிஞ்சான சூத்திரந்தான் காவியத்தின்சொச்சம்
    மிக்கான அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments