HomeUncategorizedகாகபுசுண்டர் உபநிடதம் 16 - 20 of 31 பாடல்கள்

காகபுசுண்டர் உபநிடதம் 16 – 20 of 31 பாடல்கள்

காகபுசுண்டர் உபநிடதம் 16 – 20 of 31 பாடல்கள்

     
16. அரிதில்லை பிரமவியா கிருத சீவன்
    ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை
    சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
    குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது;
    சீவவை ராக்யமெனுந் திறமி தானே.

விளக்கவுரை :
    
17. திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
    திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
    சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
    வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
    அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.

விளக்கவுரை :

    
18. என்னவே அஞ்ஞானி உலகா சாரத்
    திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன்பின் மரண மானால்
    மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
    விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச்
    சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே.

விளக்கவுரை :
    
19. தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ்
    சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்;   
ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே
    இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
    வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி
நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி
    நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே.

விளக்கவுரை :

    
20. ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
    அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்;
மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத
    முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்;
கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம்
    குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்;
பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது
    பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments